
பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்… வைரலாகும் வீடியோ!
நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்திலேயே போனி கபூர் தயாரிப்பிலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கி இடைவேளை விடப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பிற்காக அஜித் தற்போது விசாகப்பட்டினம் சென்றுள்ளார். அங்கு 20 முதல் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அஜித் பேருந்தில் பயணம் செய்வது போல் உள்ளது. படப்பிடிப்பிற்காக சென்ற இடத்தில் அவர் பயணம் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.