ராமநாதபுரத்தில் பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கன்னிசேரி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் மதிவாணன் (27). இவர் கீழக்கன்னிசேரியிலிருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று மதிவாணன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மதிவாணனை மீட்டு சிகிச்சைக்காக முதுகுளத்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட மதிவாணன், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே படித்தவமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த முதுகுளத்தூர் போலீசார், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.