மதுரை: மதுரை அடுத்துள்ள பரவை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை தெற்கு வாசல் தனசேகரன் (23), இவரது உறவினர் திருமங்கலம் கண்ணன் (20) வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் சடலங்களாக கோச்சடை அருகே மீட்கப்பட்டனர்.
