சென்னை: நாளை பிரதமர், குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். நாளை காலை 11.30 மணிக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவையும் பின்னர் நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.