முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும்….

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடுவதில்லை. அவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் ஜனாதிபதியவர்களின் தனிப்பட்ட பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதியவர்களின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார்.

முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் மூலம் சில வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றது என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் அதற்கு பதிலளித்தார். அவர் கூறிய அந்த கூற்றை முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்காக அரசாங்கம் பணத்தினை செலவிடுகிறது என்று கருத்து புலப்படும் வகையில் சில ஊடகங்கள் செய்திகள் பிரசுரித்திருந்தன. இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்து செலவுகளும் தனது தனிப்பட்ட பணத்தில் செலவிடப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

மொஹான் சமரநாயக்க
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.