கேரளா
:
மேலாடை
இல்லாமல்
அரைநிர்வாண
போட்டோஷூட்
நடத்தி
சர்ச்சையில்
சிக்கிய
நடிகை
ஜானகி
சுதீர்
விளக்கம்
அளித்துள்ளார்.
மலையாள
‘பிக்
பாஸ்’
போட்டியாளரான
ஜானகி
சுதீர்
மற்றும்
அமிர்தா
வினோத்
நடிப்பில்
லெஸ்பியன்
காதலை
மையமாக
வைத்து
எடுக்கப்பட்ட
மலையாளப்
படமான
‘Holy
Wound’
ஓடிடி
தளத்தில்
வெளியாகி
உள்ளது.
அசோக்
ஆர்.நாத்
இயக்கிய
இத்திரைப்படம்,
சிறுவயதிலிருந்தே
காதலித்து,
பின்னர்
பிரிய
வேண்டிய
சூழலுக்கு
தள்ளப்பட்ட
இரண்டு
இளம்
பெண்களின்
கதையை
சுற்றிய
உருவான
திரைப்படமாகும்.
லெஸ்பியன்
மலையாளத்தில்
பெரும்
சர்சையை
கிளப்பியுள்ள
ஹோலி
வுண்ட்
திரைப்படத்தில்,
விருப்பமின்றி
திருமணம்
செய்து
கொண்டு
பாலியல்
துன்புறுத்தலுக்கு
ஆளாகும்
ஒரு
பெண்ணும்,
வலுக்கட்டாயமாக
கன்னியாஸ்திரி
ஆக்கப்படும்
இன்னொரு
பெண்ணும்
ஒரு
கட்டத்தில்
லெஸ்பியனாக
மாறுவதுதான்
இந்த
படத்தின்
கதை.
திரைப்பட
விழாக்களில்
இத்திரைப்படம்
சஹஸ்ராரா
சர்வதேச
திரைப்பட
விழா,
காஷிஷ்
மும்பை
சர்வதேச
குயர்
திரைப்பட
விழா
மற்றும்
ஃபிரேம்லைன்
சான்
பிரான்சிஸ்கோ
சர்வதேச
LGBTQ
திரைப்பட
விழா
உள்ளிட்ட
பல
திரைப்பட
விழாக்களில்
திரையிடப்பட்டது.
காதல்
என்று
வரும்போது
அதற்கு
பாலினம்
முக்கியம்
இல்லை
என்பதை
இப்படத்தின்
வாயிலாக
சொல்ல
நினைத்தாக
இயக்குநர்
அசோக்
கூறியிருந்தார்.
அரை
நிர்வாண
போஸ்டரை
இந்த
படத்தில்
நடித்த
நடிகை
ஜானகி
சுதீருக்கு
கடும்
எதிர்ப்பு
கிளம்பியது.
அந்த
சர்ச்சை
அடங்குவதற்குள்
நடிகை
ஜானகி
சுதீர்
அரை
நிர்வாண
போஸ்டரை
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
பகிர்ந்து
இருந்தார்.
அந்த
போட்டோவில்,
இடுப்பில்
மட்டும்
கேரள
பாரம்ரிய
உடையை
அணிந்து
மேலே
உடை
எதுவும்
போடாமல்,
நகைகளால்
உடலை
மறைத்தபடி
போஸ்
கொடுத்திருந்தார்.
இந்த
புகைப்படம்
பெரும்
சர்ச்சையை
ஏற்படுத்தி
நெட்டிசன்கள்
பலரும்
இவரை
திட்டிதீர்த்தனர்.
விளக்கம்
இணையத்தில்
பெரும்
புயலை
கிளப்பி
உள்ள
அரைநிர்வாண
போட்டோ
குறித்து
விளக்கம்
அளித்துள்ள
நடிகை
ஜானகி
சுதீர்,
உடலுக்கு
ஏற்ற
ஆடைகளை
அணிந்து
போஸ்
கொடுப்பதில்
எனக்கு
எந்த
ஆட்சேபனையும்
இல்லை,
இந்த
புகைப்படம்
ஆபாசமாக
தெரியவில்லை
என்றார்.
ஆண்கள்
போட்டோ
ஷூட்
நடத்தினால்
வரவேற்கிறார்கள்,
பெண்கள்
போட்டோ
ஷூட்
நடத்தினால்
சர்ச்சையாகி
விடுகிறது
என்று
விளக்கம்
அளித்தார்.