இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று பாசமான அழைக்கப்பட்டு வந்த பில்லியனரும், முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, திடீரென ஞாயிற்றுகிழமையன்று மாரடைப்பால் காலமானார்.
இது பங்கு சந்தை சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
62 வயதான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஏற்கனவே பல்வேறு உடல் நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், இறுதியாக மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.
5 நாள் மட்டுமே வேலை செய்ய முடியும்.. ஊழியர்கள் கெடுபிடி, வழிக்கு வரும் நிறுவனங்கள்..!
பங்குகளின் நிலை என்ன?
இவரின் இழப்பு நிதி துறையில் ஈடு செய்ய முடியாத ஒன்று என பிரதமர் மோடி கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. இப்படி ஒரு நிலையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் இருந்த கிட்டதட்ட 4 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளின் நிலை என்ன? ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிலை என்ன? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
கவனம் ஈர்த்த முதலீட்டாளர்
இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்த ஒன்றாகவும் உள்ளது. ஏனெனில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தில், மிக முக்கிய முதலீட்டாளாராக இருந்து வந்தார். குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் இவரின் போர்ட்போலியோவினை தொடர்ந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அவர் தற்போது இல்லாத நிலையில் அவரின் போர்ட்போலியோ பங்குகளின் நிலை என்ன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம் இருந்த பங்குகள்
குறிப்பாக டாடா குழுமத்தினை சேர்ந்த டைட்டன் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன் ஜுன்வாலா பெயரில் பெரியளவில் பங்குகளை வாங்கி வைத்திருந்தார்.
இது தவிர ஸ்டார் ஹெல்த் & அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம், மெட்ரோ பிராண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஆப்டெக் லிமிடெட், நசரா டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்களில் 10% அதிகமான பங்குகள் உள்ளன. இது தவிர இன்னும் பல நிறுவனங்களிலும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவுக்கு பங்குகள் உண்டு. பல நிறுவனங்களிலும் முதலீடு செய்துதிருந்தார்.
முதலீட்டாளர்கள் குழப்பம்
ஆக மேற்கண்ட பங்குகள் விற்பனை செய்யப்பட்டு மீண்டும் வாங்கப்படுமா? முதலீடுகள் மீண்டும் தொடருமா? இதனால் சந்தையில் தாக்கம் ஏற்படுமா? இப்பங்குகள் விலை குறையுமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தால் தான் உண்மை நிலவரம் என்பது தெரிய வரும்.
இன்றைய நிலவரம் என்ன?
டைட்டன் – பி எஸ் இ-யில் 0.91% ஏற்றம் கண்டு, 2494.75 ரூபாயாக வர்த்தகம்
ஸ்டார் ஹெல்த் & அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் – பி எஸ் இ-யில் 1.57% ஏற்றம் கண்டு, 707 ரூபாயாக வர்த்தகம்
மெட்ரோ பிராண்ட்ஸ் – பி எஸ் இ-யில் சற்று அதிகரித்து, 856.85 ரூபாயாக வர்த்தகம்
டாடா மோட்டார்ஸ் – பி எஸ் இ-யில் 0.70% ஏற்றம் கண்டு, 480.85 ரூபாயாக வர்த்தகம்
ஆப்டெக் லிமிடெட் – பி எஸ் இ-யில்5.46%% குறைந்து, 219.80 ரூபாயாக வர்த்தகம்
நசரா டெக்னாலஜி – பி எஸ் இ-யில் 2.14% ஏற்றம் கண்டு, 656.50 ரூபாயாக வர்த்தகம்
What is the status of Rakesh Jhunjhunwala’s $4 billion worth of shares? Investors’ focus?
What is the status of Rakesh Jhunjhunwala’s $4 billion worth of shares? Investors’ focus?/ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு.. கவனம் பெறும் $4 பில்லியன் டாலர் பங்குகள்.. ஏன் தெரியுமா?