லொட்டரியில் ரூ.1000 கோடி வென்ற வயதான தம்பதி! திரைப்படமாக மாறிய உண்மை கதை


அமெரிக்காவைச் சேர்ந்த வயதான தம்பதி லொட்டரியில் ரூ. 1000 கோடிகளுக்கு மேல் சம்பாதித்துள்ளனர்.

அவர்களது கதை சமீபத்தில் ‘Jerry & Marge Go Large’ என திரைப்படமாக வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் லொட்டரியில் மொத்தம் ரூ.1000 கோடிகள் வென்ற வயதான தம்பதியின் கதை ஒரு முழு நீள திரைப்படமாக வெளிவந்துள்ளது.

வாராந்திர அல்லது மாதாந்திர லாட்டரிகளை விளையாடுபவர்களுக்கு எண் சேர்க்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய தோராயமாக யோசனை உள்ளது. ஆனால் அனைத்து வகையான புத்திசாலித்தனமான யூகங்கள் மற்றும் கணக்குகள் போட்டாலும், ஒரு சிலரால் மட்டுமே பம்பர் லொட்டரிகளை வெல்ல முடிகிறது. எவ்வாறாயினும், இறுதியில் டிக்கெட் உரிமையாளரின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

லொட்டரியில் ரூ.1000 கோடி வென்ற வயதான தம்பதி! திரைப்படமாக மாறிய உண்மை கதை | Couple Won1000 Crores Money Lottery Cracking CodePhoto: 60 Minutes

ஆனால், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ஓய்வுபெற்ற தம்பதிகளான Jerry மற்றும் Marge Selbee, ஒரு பெரிய ஜாக்பாட்டின் குறியீட்டை முறியடித்தது மட்டுமல்லாமல், பல டிக்கெட்டுகளில் விளையாடி 23 மில்லியன் பவுண்டுகளை (இலங்கை ரூ. 1000 கோடி) வென்றனர்.

அவர்கள் எளிய கணிதத்தைப் பயன்படுத்தி சிறிய தொகைகளை முதலில் வென்று வந்தனர்.

2003-ல் தங்கள் வியாபாரத்தை விற்ற பிறகு தம்பதியருக்கு லொட்டரி அதிர்ஷ்டம் தொடங்கியது. ஜெர்ரி ஒரு நாள் தனது பழைய கடைக்கு பார்த்துவிட்டுவர சென்றுள்ளார், அங்கிருந்து திரும்பும் வழியில் ​​’ரோல்டவுன்’ என்ற சிறப்பு அம்சத்துடன் கூடிய புதிய லொட்டரி விளையாட்டைக் கவனித்தார்.

லொட்டரியில் ரூ.1000 கோடி வென்ற வயதான தம்பதி! திரைப்படமாக மாறிய உண்மை கதை | Couple Won1000 Crores Money Lottery Cracking Codephoto: 60 Minutes

கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஜெர்ரி, லொட்டரியை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார், ஏனெனில் இது வழக்கமான ஜாக்பாட்களிலிருந்து ஒப்பீட்டளவில் வேறுபட்டது, யாரோ ஒருவர் அனைத்து சரியான ஆறு எண்களையும் அடிக்கும் வரை ஜாக்பாட் முடியாமல் பரிசுத்தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

ஜாக்பாட் 5 மில்லியன் டொலர்களை எட்டிய பிறகு, ஆறு எண்களையும் யாரும் பொருத்தவில்லை என்றால், நான்கு அல்லது ஐந்து எண்களுடன் பொருந்திய கீழ் அடுக்கு பரிசு வென்றவர்களுக்கு லாட்டரியில் உள்ள அனைத்துப் பணமும் பரிசாக வழங்கப்படும்.

நம்பினால் நம்புங்கள், இந்த லொட்டரியை உடைக்க ஜெர்ரிக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆனது. 2005-ஆம் ஆண்டு கேம் முடிவடையும்போது கிட்டத்தட்ட 80,000 டொலர்களை வென்றதாக கூறப்படுகிறது.

லொட்டரியில் ரூ.1000 கோடி வென்ற வயதான தம்பதி! திரைப்படமாக மாறிய உண்மை கதை | Couple Won1000 Crores Money Lottery Cracking Code

அதிர்ஷ்டவசமாக, கேஷ் வின்ஃபால் எனும் இதேபோன்ற லொட்டரி விளையாட்டை மாசசூசெட்ஸில் அவர்கள் கண்டுபிடித்தனர். அதில், பலமுறை லொட்டரிகளை தெடர்ந்து வென்று, இதுவரை 23 மில்லியன் பவுண்டுகள் அவரை வென்றுள்ளனர்.

இதனால் இந்த ஜோடி மிகவும் புகழ்பெற்றதாக மாறியது. இவர்களது கதையும் இப்போது ‘ஜெர்ரி & மார்ஜ் கோ லார்ஜ்’ என்ற திரைப்படமாக மாறியது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.