சென்னை: நடிகர் சூர்யாவின் 2d என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், இந்திரஜா ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை அதிதி ஷங்கர் மற்றும் இந்திரஜா ஷங்கர் செய்த அலப்பறைகள் தற்போது வெளிவந்துள்ளது.
அதிகரித்த எதிர்பார்ப்பு
நடிகர் கார்த்தி ,இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், இந்திரஜா ஷங்கர் என்று நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் தான் விருமன். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படம் வெளி வருவதற்கு முன்பே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கு காரணம் இயக்குநர் ஷங்கரின் மகள் இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆவது தான்.

கைகொடுத்த கிராமத்து கதை
முழுக்க முழுக்க கிராமத்து சப்ஜெக்ட்டாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வெளிவந்த நாளில் இருந்தே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரையில் 30 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்துடன் வெளிவந்த பல படங்கள் ஃபிளாப்பான நிலையில், விருமன் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்த பல படங்கள் அவருக்கு கை கொடுத்த நிலையில் இந்த படமும் அவருக்கு கை கொடுத்துள்ளது.

முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அதிதி
ஏற்கனவே கார்த்தி நடித்திருந்த பருத்திவீரன், கொம்பன் போன்ற பல படங்கள் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது. விருமன் திரைப்படத்தை கொம்பன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கரின் காம்போ பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தனது முதல் படத்திலேயே நடிப்பு, நடனம், பாடகி என்று தனது முழு திறமையையும் வெளிக்காட்டியுள்ளார் அதிதி ஷங்கர். இந்த முதல் படத்தின் மூலமே அதிதி ஷங்கருக்கு ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது. இணையதளத்தில் எங்கு பார்த்தாலும் இவரின் வீடியோக்களும் நேர்காணல்களும் குவிந்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவின் இசை பின்னி பெடலெடுத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் வெற்றிகளும் ஒரு முக்கியமாக கருதப்படுகின்றது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிதி செய்த குறும்புத்தனத்தினை நடிகர் சூரி மற்றும் கார்த்தி கூறி இருந்தனர். அது மட்டும் இல்லாமல் சேட்டை, ரகளை செய்து வந்த அதிதியின் பல வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில்வெளிவந்த நிலையில், இவர் நடிகை இந்திரஜா ஷங்கருடன் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

பிரபலமான பாண்டியம்மா
இந்திரஜா ஷங்கர் ஏற்கனவே பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது. அதிதி சங்கர் மற்றும் இந்திரஜா ஷங்கர் நடனமாடிய “கஞ்சா பூ கண்ணால பாடல்” வீடியோவை இந்திரஜா ஷங்கர் தனது சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரிடத்திலும் இயல்பாக பழகக் கூடிய அதிதி சங்கரை புகழ்வதுடன், இருவரையும் பாராட்டி வருகின்றனர்.