வீட்டுப்பாடம் கட்..! மாணவர்களுக்கு குட் நியூஸ் – கல்வித்துறை அதிரடி!

சென்னை உயர் நீதிமன்றம் வீட்டுப் பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

1 மற்றும் 2 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஒன்று, இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அதனை முறையாக கடைபிடிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

பள்ளிகளில் பறக்கும் படையை கொண்டு ஆய்வு செய்து, ஒன்று, இரண்டு வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தராமல் இருப்பது உறுதி செய்து தர வேண்டும் என்றும் அதற்கான அறிவிப்பில் கூறியுள்ளது. ஆய்வுக்குப் பின் வீட்டுப் பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பள்ளிக் கல்வித் துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டுப் பாடம் தரப்படும் போது அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் விவரம், மாணவர்கள் சமர்ப்பிக்கும் விவரம் போன்றவற்றை உரிய முறையில் பராமரிக்க ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.