அமெரிக்கா : பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கண்ணாடி முன் நின்று 26/8/2022 என்று தேதியை எழுதி இதயத்தை வரைந்ததற்கு என்ன காரணம் என புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
2000 ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாகவும், அந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடி பாடகியாகவும் அறிமுகமானார்.
ஒரே படத்தோடு பாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா சோப்ரா செம பிஸியாகி விட்டார். அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் முன்னணி நடிகையாகி விட்டார்.
பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதித்த பிரியங்கா சோப்ரா, நடிகை, தயாரிப்பாளர், பாடகி, தொழிலதிபர் என பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றியும் பெற்றார். தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகரான நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. இதுவே பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து பாலிவுட்டில் பீக்கில் இருக்கிறார்.

திருமணம்
2018 ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா – நிக் ஜோன்ஸ் திருமணம் நடைபெற்றது. கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி இந்த திருமணம் 3 நாட்கள் விழாவாக நடைபெற்றது. ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற உமைத் பகவான் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது.

பெண் குழந்தை
பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதி திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தங்களது முதல் குழந்தையை பெற்றெடுத்தனர். அதுவும் வாடகைத் தாய் முறையில் அந்த குழந்தையை பெற்றுக்கொண்டனர். அத்தம்பதி தங்களது பெண் குழந்தைக்கு மல்டி மேரி என பெயர் வைத்துள்ளனர்.

குழப்பத்தில் ரசிகர்கள்
இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு கண்ணாடியில் 26/8/2022 என்று தேதியை எழுதி இதயத்தை வைத்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும், இந்தவீடியோவுக்கு கேப்ஷனாக “Mirror mirror on the wall… I can’t wait to reveal it all” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பிரியங்கா என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமல் மண்டையை உடைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.