Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
சென்னை வங்கிக் கொள்ளை
சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில், கடந்த 13 ஆம் தேதி, 31.7 கிலோ அடமானம் வைக்கப்பட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது., இதுதொடர்பாக, பாலாஜி, சந்தோஷ், செந்தில்குமரன், முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் 3 நபர்களை தேடி வருகின்றனர்.
விசாரணையில் முதல் கட்டமாக 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 8.50 கோடி ஆகும். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்த எல்லை பகுதியில் இரு நாடுகளில் படைகளும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம்.
அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமாகும். இந்நிலையில், சுதந்திர தினத்தன்று மாலை இந்த எல்லைப் பகுதியில், வீரர்கள் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வினை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி, சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் சென்றடைந்தது.
சென்னை, அரும்பாக்கம் வங்கியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சூர்யாவை காவல்துறை கைது செய்தது.
மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம், இன்று டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூற உள்ளார்.
பின்னர், பிரதமர் மோடியை சந்தித்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார.
தமிழகத்தில் 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி இன்று காலை 10:30 மணிக்கு வெளியிடுகிறார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது.
விதிகளை மீறி செயல்பட்டதாக, அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து, ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியை இடமாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய வழக்கில், பாஜக மகளிர் அணியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி மற்றும் தெய்வானை என்ற 3 பெண்களை தனிப்படை காவல்துறை கைது செய்தது. ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.