அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 29 பைசா அதிகரித்து, 79.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இந்திய பங்கு சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அன்னிய முதலீடுகள், இதற்கிடையில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளது.
மேலும் ரூபாயின் மதிப்பினை தூண்டும் விதமாக கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
இது பணவீக்கமும் குறைய வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தான் ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் இன்று காலை இந்திய ரூபாயின் மதிப்பானது 79.32 ரூபாயாக தொடங்கியுள்ளது. இன்றைய உச்சம் 79.26 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச மதிப்பு 79.48 ரூபாயாக குறைந்துள்ளது. இது முடிவில் 79.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும் 29 பைசா அதிகரித்துள்ளது.
இன்றைய சந்தை நிலவரம்?
இன்று சென்செக்ஸ் 417.92 புள்ளிகள் அல்லது 0.70% அதிகரித்து, 60,260.13 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 119 புள்ளிகள் அதிகரித்து அல்லது 0.67% அதிகரித்து, 17,944.25 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் + முதலீடுகள்
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சற்று குறைந்துள்ளது. இது இன்னும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஈக்விட்டி சந்தையிலும் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், இது முதலீட்டாளார்கள் மத்தியில் நேர்மறையான எண்ணத்தினை உருவாக்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் முதல் இரண்டு வாரத்தில் 22,452 கோடி ரூபாய் முதலீடானது செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
எனினும் வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி குறித்தான முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரூபாயின் மதிப்பில் தொடர் ஏற்றத்தினை கட்டுப்படுத்தலாம். இதனால் ரூபாயின் மதிப்பு மீடியம் டெர்மில் 79.10 – 79.85 ரூபாய்க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
indian rupee against dollar as foreign capital inflows strengthen investor sentiment
indian rupee against dollar as foreign capital inflows strengthen investor sentiment/அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?