அதிமுகவில் அடுத்து என்ன? புது கணக்கு போடும் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று

மற்றும் அவரது ஆதரவாளர்கள் மரியாதை செலுத்தினர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் அவர்கள் தொண்டர்கள் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். இதை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார். எம்.ஜி.ஆர் 10 ஆண்டுகாலம், ஜெயலலிதா 16 ஆண்டுகாலம் நல்லாட்சியை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிறது. இதனை ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம். தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ, அது இன்று நடந்திருக்கிறது. ஏனெனில் இது தொண்டர்கள் இயக்கம்.

இதை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் நடக்காது. இந்த இயக்கத்தை சர்வாதிகாரமோ, தனி நபரோ, ஒரு குடும்பமோ கொண்டு செல்ல விரும்பினால் அது நடக்காது என்பதை உணர்த்து வகையில் இன்றைய தீர்ப்பு அமைந்திருக்கிறது. இது முழுமையான வெற்றி. அனைவரும் ஒன்றுபட வேண்டும். யாரெல்லாம் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்களோ? அவர்களை எல்லாம் மீண்டும் இணைப்போம் என்று கூறியிருந்தோம்.

அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு யாரெல்லாம் இசைந்து வர விரும்புகிறார்களோ? அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்படுவர். சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் படி, 23.06.2022க்கு முன்பு எப்படிப்பட்ட நிலை அதிமுகவில் இருந்ததோ, அதேநிலை தற்போதும் நீடிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடப்போம்.

எனக்கு தொண்டர்கள் அளித்திருக்கக் கூடிய பொறுப்பு ஒருங்கிணைப்பாளர். அதன்படி அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்வேன். இனிமேல் அவங்க தரப்பு, இவங்க தரப்பு என்றெல்லாம் இல்லை. அதிமுக ஒரே இயக்கம். தேவைப்பட்டால் கலந்து பேசி பொதுக்குழு நடத்தப்படுவது பற்றி முடிவு செய்யப்படும். எங்களது எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்கள் விருப்பப் படியும், தமிழக மக்கள் நலனிற்காகவும் மட்டும் இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.