அதிமுக ஒற்றைத் தலைமை யுத்தம்… இபிஎஸ் செய்த மூன்று தவறுகள்!

தவறு 1:
ஜெயலலிதாவின் மறைவு்க்கு பின் சசிகலா அன்கோவின் முடிவின்படி, யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக தமிழக முதல்வராகிறார்

. அத்துடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பொறுப்புக்கும் வருகிறார் அவர்.

தமிழ்நாட்டுக்கு முதல்வர்… கட்சிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் என நான்கு ஆண்டுகள் கெத்தாக வலம் வந்துக் கொண்டிருந்த இபிஎஸ், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்ததன் விளைவாக முதல்வர் என்ற நிலையில் இருந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார். அதுவே வெயி்ட்டான பதவிதான் என்றாலும், கட்சியில் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் ஏற்படுத்தி, அந்த பதவியை பிடிப்பதற்கான வேலைகளில் அதிரடியாக இறங்குகிறார் இபிஎஸ்.

அதாவது ஓபிஎஸ்சின் ஆதரவில் நான்கு ஆண்டுகள் ஆட்சி, அதிகாரத்தில் இருந்துவிட்டு சசிகலாவை ஓரங்கட்டியது போல், முதல்வர் பதவி பறிபோனதும், கட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட இபிஎஸ் முயன்றது மிக்ப்பெரிய தவறு. ஓபிஎஸ்சுக்கு அவர் செய்த துரோகம். அப்படி கட்சியின் தலைமைப் பொறுப்பும் தமக்கு தான் வேண்டும் என்று இபிஎஸ் நினைத்திருந்தால், அதற்கான முயற்சியை அவர் ஆட்சியில் இருந்தபோதே எடுத்திருக்க வேண்டு்ம். அதுதான் நியாயமாக இருந்திருககும். அவ்வாறு இல்லாமல் அவர் அநியாயமாக நடந்து கொண்டதற்குதான் தண்டையாகதான் இன்றைய நீதிமன்ற தீர்ப்பை பார்ப்பதாக கூறுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

தவறு 2:
ஓபிஎஸ்சின் பேச்சை கேட்காமல், ஜூன் 23 இல் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்த பொதுக்குழுவிலேயே ஒற்றைத் தலைமை யார் என்பதை முடிவு செய்துவிட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தது இபிஎஸ் தரப்பு. இதையடுத்து ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு தடைக்கோரி நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழு நடத்த தடையில்லை என்று தீர்ப்பளித்திருந்த நிலையில், அதனை எதிர்த்து ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு வழக்கை இரவோடு இரவாக விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழுவில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை தவிர்த்து புதிதாக எந்த தீர்மானங்களையோ, முடிவுகளையோ எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜூன் 23 பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அப்செட்டான இபிஎஸ் அன்கோ, ஜூன் 23 தேதி பொதுக்குழுவில் கட்சியின் அவை முன்னவராக தமிழ்மகன் உசேனை தேர்ந்தெடுத்துடன், ஏற்கெனவே நிறைவேற்றுவதாக முடிவு செய்யப்பட்டிருந்த அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாகவும், ஜூலை 11 ஆம் தேதி, தமிழ்மகன் உசேன் தலைமையில் மீண்டும் பொதுக்குழு நடக்கும் என்றும் பகிரங்கமாக அறிவித்தது. அதன்படியே ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழுவை கூட்டப்பட்டு, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுககப்பட்டார். இங்குதான் இபிஎஸ் இரண்டாவது தவறை செய்ததாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஜூன்23 ஆம் தேதி பொதக் குழுவையே இபிஎஸ் அன்கோவால் திட்டமிட்டப்படி நடத்த முடியாமல் போனபோது, ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழுவை கூட்டி, அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் தமது நிலைமை என்னவாகும் என்பதை இபிஎஸ் எண்ணி பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

தவறு 3:
கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு, ஓபிஎஸ்ஸை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது அதிகார மமதையின் உச்சம் என்றால், அவரது மகனும், அதிமுகவின் ஒரேயொரு எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்தையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதுடன், அவர் இனி அதிமு எம்பியே இல்லை என்று அறிவிக்க கோரியதெலலாம் இபிஎஸ்சின் அடாவடிி அரசியல் ஆட்டத்தின் உச்சம் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இப்படி கட்சி தலைமை விஷயத்தில் ஓபிஎஸ்லை ஓரங்கட்டும் நோக்கத்தில் தான் செய்த தவறுகளுக்குதான் இபிஎஸ்ஸுக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.