உடலுறவு, உடலுறவின்போது ஆணுறை பயன்பாடு உள்ளிட்டவை குறித்து தேசிய துடும்ப நல அமைப்பு அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுமார் ஒரு லட்சம் ஆண்கள், ஒரு லட்சம் பெண்களிடம் மேற்கொள்ளபட்ட அந்த ஆய்வு முடிவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுடன் திருமணம் ஆகாத, விவாகரத்து ஆன மற்றும் விதவை பெண்கள் அதிக அளவு உடலுறவு கொண்டுல்ளனர். இவர்களில் நகர்ப்புற பெண்களைவிட கிராமப்புற பெண்களே அதிகம் என்பது கூடுதல் தகவல்.
தங்களது வாழ்க்கை துணையான மனைவியை தவிரத்து பிற பெண்களுடன் 3.6 சதவீத ஆண்கள் உடலுறவு கொண்டுள்ளனர். தேசிய அளவிலான இந்த ஆய்வில் கணவன் அல்லாத பிற ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ள பெண்களின் சதவீதம்0.5 சதவீதம் மடடுமே.
கேரளாஸ ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்கள், தங்களது வாழ்நாளில் ஆண்களைவிட அதிக முறை பாலுறவு வைத்துள்ளனர்.
பாதுகாப்பாற்ற உடலுறவின்போது ஆணுறை போன்ற தற்காப்புகளை பயன்படுத்துவதில் பெண்களைவிட ஆண்களே முன்னிலையில் உள்ளனர் என்பன உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன.