சென்னை: தேர்தல் நேரத்தின்போது, அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்பு தொடர்பான வழக்கில், தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், தேர்தலில் கட்சிகள் வாக்காளர்களை கவர்வதற்கு, இலவச திட்டங்களை அறிவித்து விடுகிறார்கள். அது மக்களை சோம்பேறி ஆக்கும் செயல் என விமர்சிக்கப்பட்டு வந்தத. மேலும், மத்தியஅரசு இலவச அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இலவச அறிவிப்பை தடை செய்ய சட்டத்தில் இடமில்லை என்று கூறி வருகிறது. பல அரசியல் கட்சிகளும் இலவச அறிவிப்புக்கு தடை விதிக்கக்கூடாதா என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என திமுக சார்பில் இடையீட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக மனுவையும் பரிசீலனை செய்து தான் அடுத்த விசாரணை தொடங்கும் என கூறபடுகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதிகளிலும், வண்ண தொலைக்காட்சி போன்றவை அறிவித்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.