வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு : ‘இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 24ல் இலங்கை திரும்புவார்’ என அவரது உறவினர் கூறினார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அடுத்து அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் கடந்த மாதம் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஜூலை 13ல் அங்கிருந்த தப்பிச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு சென்றார்.
பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தங்கியிருந்தார். அங்கு ‘விசா’ காலம் முடிவடைந்ததையடுத்து11ம் தேதி தாய்லாந்து சென்ற அவர் பாங்காங் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் அவரது உறவினரான வீரதுங்க கூறியதாவது: கோத்தபய ராஜபக்சே என்னுடன் போனில் பேசினார். வரும் 24ம் தேதி அவர் இலங்கை திரும்புவார். அவரால் மீண்டும் இலங்கை மக்களுக்கு சேவை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement