ஆடையை கழட்டி நடிச்சா என்ன தப்பு..கதைக்கு என்ன தேவையோ அதை செய்கிறேன்..அமலா பால் பேட்டி!

சென்னை : ஆடையை கழட்டி நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நடிகை அமலா பால் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் 2009 முன்னணி ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

பின் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் முதல்படத்திலேயே சர்ச்சைக்குரிய கதையில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

அமலா பால்

அமலா பால் நடித்த மைனா திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதன் பின்னர் விஜய்யுடன் தலைவா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி, ஜெயம் ரவி உடன் நிமிர்ந்து நில், அதர்வா உடன் முப்பொழுதும் உன் கற்பனை என பல படத்தில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

பிரிந்தனர்

பிரிந்தனர்

இயக்குநர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்து படங்களில் கவனம் செலுத்தினார். ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி, ஆடை திரைப்படத்திற்கு பின் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் படவாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

கடாவர்

கடாவர்

நடிகையாக மட்டும் இருந்த அமலா பால் கடாவர் படத்தை தயாரித்து தயாரிப்பாளராக மாறியுள்ளார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான கடாவர் திரைப்படம் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியானது இந்த படத்தில் அமலா பால் தோற்றம், நடிப்பு என அனைத்திலும் ஒட்டுமொத்தமாக வித்தியாசத்தை காட்டி ஸ்கோரை அள்ளி உள்ளார். கடாவர் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

கவர்ச்சி இல்லை

கவர்ச்சி இல்லை

நீண்ட நாட்களுக்கு பிறகு அமலாபால் நடித்த படம் வெளியாகி உள்ளதால் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமலா பால், இந்த படத்திற்காக நான் நேரடியாக சவக்கிடங்குக்கு சென்று அங்கு நடப்பதை கூர்ந்து பார்த்தேன். நான் இந்த படத்தில் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்பதால் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை இதனால், இந்த படத்தை திரையரங்கில் வெளியிட முடியாமல் போனது, என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தவறில்லை

தவறில்லை

மேலும், சமீபத்தில் வெளியான விக்டிம் என்ற ஆந்தாலாஜி சீரிஸில் ‘Confession’ என்ற குறும்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமலா பால், அந்த குறும்படத்தில் ஒரு காட்சியில் உடையை கழட்டி மாற்றுவது போல் காட்சி இருக்கும் அந்த காட்சி குறித்து விமர்சித்தார்கள்.ஆனால்,உண்மையில் அந்த காட்சி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எனக்கு தப்பா தெரியல. வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தவுடன் அனைவரும் உடையைத்தான் மாற்றுவோம் மேலும்,கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் செய்கிறேன் என்று நடிகை அமலா பால் பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.