மதப்பிரச்சாரங்கள் செய்ய எங்கள் கிராமத்தில் அனுமதி இல்லை என்று கோவை மாவட்ட கிராமம் ஒன்றில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் காடுவெட்டி பாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் இந்துக்கள் வாழும் குடும்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. பொதுவாக கோவை மாவட்ட பகுதிகளில் இந்து மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் நிறைய பேர் பேனர்கள் வைத்து சுவரொட்டிகள் அடித்து தங்களது இந்து மத உணர்வை வெளிப்படுத்தி இருப்பதை மாவட்டம் முழுவதும் காண முடியும்.
அந்த வகையில், தற்போது கோவை மாவட்டம் காடுவெட்டி பாளையம் என்ற கிராமத்தில் அப்பகுதியில் வாழும் மக்கள் ஊர் எல்லையில், ஒரு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதில், “இது இந்துக்கள் வாழ்கின்ற பகுதி. இங்கே மத கூட்டங்கள் மற்றும் பிரச்சாரம் நடத்த எந்த அனுமதியும் இல்லை.” என்ற தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.