இலங்கை திரும்பும் கோட்டாபய ராஜபக்ச…திகதியை அறிவித்த முன்னாள் ஜனாதிபதியின் உறவினர்


  • ஆகஸ்ட் 24ம் திகதி இலங்கைக்கு திரும்புகிறார் கோட்டாபய ராஜபக்ச
  • முன்னர் செய்ததைப் போன்று இன்னும் சில சேவைகளை நாட்டுக்கு செய்ய முடியும் உதயங்க வீரதுங்க கருத்து

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகஸ்ட் 24ம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என அவரது உறவினர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிரான மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடைபெற்றது.

இதில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறியதுடன் தனது ஜனாதிபதி பதவியையும் ராஜினாமா செய்தார்.

இலங்கை திரும்பும் கோட்டாபய ராஜபக்ச...திகதியை அறிவித்த முன்னாள் ஜனாதிபதியின் உறவினர் | Gotabaya To Return To Sri Lanka On August24Reuters

முதலில் விமானம் மூலம் மாலத்தீவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் சென்ற கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் தனது விசா காலாவதியான அதே நேரத்தில் அங்கிருந்து வெளியேறி தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிற்கு சென்றார்.

இதுத் தொடர்பாக தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்த அறிவிப்பில் மனிதாபிமான காரணங்களுக்காக 73 வயதான இலங்கை தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தற்காலிக விஜயத்தை உறுதி செய்தார்.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகஸ்ட் 24ம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என அவரது உறவினர் உதயங்க வீரதுங்க தகவல் தெரிவித்தார்.

இலங்கை திரும்பும் கோட்டாபய ராஜபக்ச...திகதியை அறிவித்த முன்னாள் ஜனாதிபதியின் உறவினர் | Gotabaya To Return To Sri Lanka On August24Reuters

2006 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவிற்கான இலங்கை துதராக இருந்த வீரதுங்க, கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், அடுத்த வாரம் நாடு திரும்புவார் என்று நான் உங்களுக்கு சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் முன்னர் செய்ததைப் போன்று இன்னும் சில சேவைகளை நாட்டுக்கு செய்ய முடியும்.

கூடுதல் செய்திகளுக்கு: பூமியில் நீர் தோன்றியது எப்படி? விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்

அத்துடன் ராஜபக்ச தற்போது தாய்லாந்தின் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார் , அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.