கோவை: உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை கோவை ஆனைக்கட்டி அருகே செங்குட்டை பகுதியில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை இருக்கும் பட்டிசாலை- காரமடை வனச்சாலையில் வாகனங்கள் செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. 11 குழுக்கள் தேடிவந்த நிலையில் யானை இருக்கும் இடம் தெரிந்ததால் வனத்துறை ஆலோசனை நடத்தி வருகின்றது.
