உணவு நெருக்கடியால் குழந்தைகளுக்கு பிரச்சனை.. நோபல்பரிசு பெற்ற நிபுணர் பகீர்!

கொரோனா பெருந்தொற்று, உலக வெப்பமயமாதல், எரிபொருள் நெருக்கடி, உணவு நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகள் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையும் மேற்கொண்டு குழந்தைகளின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளன என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றும் இன்று வரையில் முடிந்தபாடாக இல்லை. இதனால் குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. குழந்தை திருமணம் போன்ற மோசமான பிரச்சனைகளும் இருந்து வருகின்றன.

குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம்

கடந்த 2020ம் ஆண்டில் நாடு தழுவிய லாக்டவுன் என்பது அமலில் இருந்தது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்பட்ட மக்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். பல லட்சம் பேர் அந்த காலகட்டத்தில் வேலையினை இழந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அதிகம்.

என்னென்ன பிரச்சனைகள்?

என்னென்ன பிரச்சனைகள்?

இதனால் குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணங்கள், ஆட்கடத்தல் போன்ற பல பிரச்சனைகளும் எழுந்துள்ளன. இதில் புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

நான் தனிப்பட்ட முறையில் பல குழந்தைகளையும், அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்தேன். வேறு வழியில்லாததால் 12 வயதில் குழந்தைக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினோம். இதன் மூலம் சிறியவர்களுக்காக வீட்டில் கொஞ்சமேனும் உணவை சேமிப்போம் என கூறுகின்றனர்.

தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை
 

தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை

இந்த உலகளாவிய பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. நம்மிடம் உலக மயமாக்கப்பட்ட பொருளாதாரங்கள், சந்தைகள், உற்பத்தி, சப்ளை சங்கிலிகள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளது.

ஆனால் இந்தியா அதன் இரக்கத்தினை உலகமயமாக்க வேண்டும். இரக்கம் என்பது பிறர் துன்பத்தினை தன் துன்பமாக நினைப்பது. இதன் பொருள் நீங்கள் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வினை கண்டறிய வேண்டும் என கூறியுள்ளார்.

பிரச்சனைகள் களையப்படணும்

பிரச்சனைகள் களையப்படணும்

இதற்கான நடவடிக்கைகளை கண்டறிய வேண்டும். தலைமைகள் இப்பிரச்சனைகளை களைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சத்யார்த்தி கூறியுள்ளார்.

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச பொருளாதாரமே ஆட்டம் கண்டு வரும் நிலையில், உலகின் பல நாடுகளும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதனால் உலக நாடுகள் பலவும் வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இது மேற்கொண்டு பிரச்சனையை அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia – ukirane crisis: Food crisis puts children in chronic crisis

Russia – ukirane crisis: Food crisis puts children in chronic crisis/உணவு நெருக்கடியால் குழந்தைகளுக்கு பிரச்சனை.. நோபல்பரிசு பெற்ற நிபுணர் பகீர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.