வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
2020-இல் கொரோனா நோய்த்தொற்று தீவிரம் அடைய தொடங்கிய காலக்கட்டத்தில், மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டனர். இது மக்களை வீடுகளுக்குள் முடங்க வைத்தது. மக்களின் வாழ்க்கை முறையை கடுமையாக பாதித்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் வெளியே செல்வதற்குப் பழகியிருந்த நிலையில், திடீரென வீட்டுக்குள்ளேயே முடங்கியது உடல் இயக்கத்தையே மாற்றியது. எப்போதும் பரபரப்பான வேலையைக் கொண்டிருந்தவர்களும்கூட எந்த வேலையும் செய்ய முடியாமல் டிவி முன்பு உட்கார வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். ஆனால் மற்றொருபுறம் கொரோனா காலக்கட்டத்தில் தான் மக்கள் தங்கள் மீதும் தங்கள் உடலின் மீதும் கவனம் செலுத்த தொடங்கினர்.
லாக் டவுன் காலக்கட்டத்தில் 19% மக்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, ஆரோக்கியமான வாழ்வில் கவனம் செலுத்த ஆரம்பித்ததாக சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மக்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளத் தொடங்கினர். எடையைக் குறைத்து, உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டனர்.

எடைக்குறைப்பு ஏன் முக்கியத்துவம் பெற்றது?
உடல் எடையை குறைப்பது முக்கியமானதாகக் கருதப்பட்டது, ஏனெனில் அது உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதற்கு உதவுகிறது, குறைந்த எடையுடன் இருப்பவர்கள் எப்போதும் சோர்வாக உணர மாட்டார்கள். உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால், மக்கள் எப்போதும் சோர்வாகவும் சோம்பேறியாகவும் உணர்கிறார்கள். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவு, துரித உணவு வகைகளால் உடல் எடை கூடுகிறது. துரித உணவுகளில் ஊட்டச்சத்து இல்லை. மேலும் பரபரப்பான வேலை காரணமாக உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போனதால் பலருக்கும் உடல் எடையை அதிகரித்தது. உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, பெரும்பாலானோர் நாள் முழுவதும் ஆக்டிவாக இருக்க முடியாமல் சோர்வாகிவிடுவர். நோய்த்தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்தபோது, அவர்களின் ஆற்றல் குறைவு, சோம்பலுக்குக் காரணமான முக்கிய குற்றவாளி யார் எனப் புரிந்துகொள்ள உதவியது. உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற தொடங்கினர்.
சிலர் தாங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்தி, அதிக எண்ணெய், இனிப்பான உணவு வகைகளையும் ஆரோக்கியமற்ற உணவு வகைகளையும் தவிர்த்தனர். இவை உடல் எடையை குறைக்க உதவின. ஒரு சீரான, சத்தான உணவு எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்கவும் உதவுகிறது.
உடற்பயிற்சி செய்வது உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஹை இன்டென்சிட்டி இன்டர்வெல் டிரெய்னிங் (HIIT), சாதாரண உடற்பயிற்சி, வேறு பல உடற்பயிற்சிகள் தசைகளை மேம்படுத்தவும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கவும் உதவுகின்றன. நடைப்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மனதையும் உடலையும் அமைதிப்படுத்த தியானம் உதவுகிறது. அதிக மன அழுத்தம் அல்லது பதற்றத்தில் ஒருவர் இருக்கும்போது, மனதை அமைதிப்படுத்த தியானம் உதவுகிறது.

முடிவாக…
உடல் எடையைக் குறைப்பதைவிட, ஆரோக்கியமான, மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையைப் பராமரிப்பது இன்றைய காலகட்டத்தில் புதிய போக்காக மாறிவருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
மேலும் உடல் எடையை குறைப்பது, உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பது எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில், மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ். ஒவ்வொருவருக்கும் தங்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களின் அன்றாட வாழ்வுக்கு என்ன தேவை என்பதை அறிந்துகொள்ளவும் கோவிட் உதவியுள்ளது.
-டாக்டர் நேஹா ஷா, பாரியாட்ரிக் சர்ஜன் ஸ்பெஷலிஸ்ட், அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை, சென்னை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.