சென்னை : நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் என இணையத்தில் பரவி வரும் செய்திக்கு அவர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநுர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி சினிமா உலகிலும் புகழ்பெற்றவராக வலம் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
எஸ்.ஜே.சூர்யா
அஜித் நடித்த ஆசை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய எஸ்.ஜே.சூர்யா, அடுத்ததாக அஜித்தை வைத்து வாலி என்ற மாஸ் படத்தை இயக்கினார். காதல் மன்னனாக வலம் வந்த அஜித்தை வில்லனாக காட்டிய பெருமை எஸ்.ஜே.சூர்யாவை சேரும். வாலி திரைப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாகவே அமைந்து அஜித்தி அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.

வரிசையாக ஹிட்
இதையடுத்து, குஷி, நியு என வரிசையாக ஹிட் கொடுத்தார் எஸ்.ஜே.சூர்யா.நியு படத்தை தானே இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தால். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அதைத் தொடர்ந்து, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன.

தலைவரே..தலைவரே
இதையடுத்து,படவாய்ப்பு இல்லாமல் இருந்த எஸ்.ஜே.சூர்யா, ஸ்பைடர் படத்தில் வில்லனாக அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்தார். இவர் வில்லனாக நடித்த மெர்சல், மாநாடு, டான் என வரிசையாக அத்தனை படங்களும் ஹிட்டாகி வருகின்றன. குறிப்பாக மாநாடு திரைப்படத்தில் தலைவரே..தலைவரே என்ற வசனமும், வந்தான், சுட்டான், செத்தான் ரிப்பீட்டு என்று மூச்சுவிடாமல் இவர் பேசியது இவரை புகழில் உச்சிக்கே கொண்டு சென்றது.

திருமணமா?
இந்த நிலையில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு திருமணம் என்றும் அவருக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும் தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவிவருகின்றன. 54 வயதாகும் எஸ்ஜே சூர்யா திருமணமா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஓரளவு வேண்டாமா?
எனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் திருமணம் பற்றி நான் சிந்திக்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை, கொளுத்தி போட ஓரளவு வேண்டாமா? என்றும் இப்போதைக்கு எனது முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.