‘ஏமாந்து விட்டேன்..!’ கல்வி தொலைக்காட்சி சி.இ.ஓ நியமனம் பற்றி அன்பில் மகேஷ் பேட்டி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கான அதிகாரிகளுடன் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள குறைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தபோது; ‘தமிழகத்தில் 2500 பள்ளிகள் மரத்தடியில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் சூழ்நிலையில் உள்ளது. புதிய கட்டிடங்கள், வகுப்பறைகள் மதில் சுவர்கள் ஆகியவற்றிற்கு 1700 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது. அந்த நிதிகள் வந்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும்’ என்றார்.
அன்பில் மகேஷ் குறித்து டீவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது குறித்த கேள்விக்கு, நேற்று இரவு சமூக வலைத்தளத்தில் ஒரு ஹேஸ்டேக் பார்த்தேன். அப்போது இது என்னடா அன்பில் பேரனுக்கு வந்த கொடுமை என்று நினைத்துக்கொண்டேன். பெரியாரின் செல்லப் பிள்ளையாக பாராட்டப்பட்டவர் அன்பில், அவருடைய செல்லப்பிள்ளை பேரன் நான், இந்த விவாதத்தில் ஆதரவு தெரிவித்த நண்பர்கள், ஆலோசனை கூறிய நண்பர்கள் அனைவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
பள்ளிக்கல்வித்துறைக்கு தொலைக்காட்சி கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதை மேம்படுத்த வேண்டும் என்று கூட்டத்தொடரில் பேசினோம். ஒரு தொலைக்காட்சி பத்தாது இரண்டாவது தேவை என்று சொல்லி அதில் நிர்வாகிப்பதற்காக ஒரு அழைப்பாணை விடுவித்தோம். 79 பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். இதில் தகுதியின் அடிப்படையில் அதில் 11 பேரை தேர்ந்தெடுத்து அதில் மூன்று பேரை தேர்வு செய்தனர்.
நாங்கள் தனிப்பட்ட முறையில் அதை தேர்வு செய்யவில்லை. அதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டு கல்வித்துறை இயக்குனர் என ஐந்து பேர் சேர்ந்து தேர்வில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பின்புலம்?, யார்?, சிபாரிசு என்ன? என்று பார்க்காமல் திறமை அடிப்படையில் தேர்வு நடைபெற்றது.
இருப்பினும் சர்ச்சை எழுந்துள்ளதால் அந்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கமும், அன்பில் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் ஏமாந்து விடமாட்டோம். அனைத்து விஷயங்களிலும் கவனமாக செயல்படுகிறேன்”
தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளதுபோல் எதிலும் சமரசம் இல்லை என்ற இயக்கம் தான் நம் இயக்கம். அவருடைய வளர்ப்பு இயக்கமும், நானும் ஏமாந்து விடமாட்டோம் என்றார்.
எல்கேஜி, யுகேஜி மாணவர்களை சேர்ப்பதற்கு 2,381 பள்ளிகள் உள்ளது. பொதுமக்களின் கோரிக்கை ஏற்று பள்ளி கல்வித்துறை இதனை நடத்தி வருகிறது. கூடுதல் சுமையாக இருந்தாலும் இதற்கு உரிய ஆசிரியர்களை நியமித்து கல்வி கற்றல் தொடரும் என்றார்.
பள்ளிகளில் தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர்கள் ஒன்றாக பாடம் எடுப்பதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, தாய்மொழி கற்றல் மிக மிக அவசியம். இதற்காக ஆசிரியர்களுக்கு 25 நாட்கள் வருடத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
புதிய ஆசிரியர்கள் 2500 பேர் தேர்வு சான்றிதழ் சரி பார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். மேலும் ஆசிரியர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கான டெட் தேர்வு அனைத்தும் முறைப்படி நடத்தி பணியில் அமர்த்தப்படுவார்கள் என குறிப்பிட்டார்.
ஆயிரம் ரூபாய் உதவி தொகை திட்டம் வருடத்திற்கு 6 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். அதன் பிறகு முதல்வர் இடம் தெரிவித்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களும் பயன்பெற அவர் முடிவெடுப்பார் என்றார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.