ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுரை பாண்டியன் தனியார் உணவகத்தில் சாப்பிடும் போது ஒருவருக்கு வைக்கப்பட்டிருந்த காடை ரோஸ்டில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மதுரை பாண்டியன் ஓட்டல் இயக்கி வருகிறது. இந்த ஓட்டலில் சைவம் மற்றும் அசைவம் சமைத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது .
இதில் நேற்று மதியம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மதுரை பாண்டியன் ஓட்டலில் சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது அவர் காடை ரோஸ்ட் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார்.
காடை ரோஸ்ட்
இதையடுத்து ஊழியரும் காடை ரோஸ்ட்டை கொண்டு வந்து வைத்தார். காடையை ஆசையாக சுவைக்க முற்பட்ட போது அந்த உணவில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனே ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியரிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்
இதனால் அந்த இரு ஹோட்டல்களுக்கும் சீல் வைக்கப்பட்ட அபராதம் விதித்து, அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்த பின்னர் கடையை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது காடை பின்பு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போன் மூலம் புகார் அளித்தார். அவர்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்பு பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்வதாக சென்றுவிட்டார். ஏற்கெனவே ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே இருவேறு ஹோட்டல்களில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமியும், தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிளஸ் 2 மாணவனும் பலியான சம்பவங்கள் நடந்துள்ளன. கறியில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு ஹோட்டல்களுக்கு அபராதம்
இதனால் அந்த இரு ஹோட்டல்களுக்கும் சீல் வைக்கப்பட்ட அபராதம் விதித்து, அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்த பின்னர் கடையை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது காடை கறியில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கை
மனிதன் வாழ்வதே ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான். அதிலும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு இது போல் அஜாக்கிரதையாகவும் அலட்சியமாகவும் உணவு சமைப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் தரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதே போல் சென்னையில் வி.ஆர். மாலில் ஒரு ஹோட்டலில் சோலாபூரியில் புழு இருந்ததும், அதை தட்டி கேட்ட போது ஊழியர், ஒரு புழுதானே என அதிர்ச்சி அளிக்கும் பதிலை சொன்னதும் குறிப்பிடத்தக்கது.