காலாவதியான அரசு பேருந்துகள் அதிக அளவில் இயக்கம்: உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

சென்னை: போக்குவரத்து கழகங்களில் காலாவதியான அரசு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

போக்குவரத்து கழக ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்தல், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம்அருகே அண்ணா தொழிற்சங்கபேரவை சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக நிர்வாகிகள் பேசியதாவது: முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: திமுக அரசு ஆட்சியைவிட்டுசென்றபோது போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.922 கோடி பாக்கிவைத்துச் சென்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஊழியர்களுக்கு ஒரே தவணையாக ரூ.1,200கோடி வழங்கினோம்.

தனியார்பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளை இயக்கினோம். தற்போது பிரேக், டயர், பல்புஇல்லாமல் உதிரி பாகங்கள் பற்றாக்குறையில்தான் போக்குவரத்து கழகங்கள் உள்ளன. காலாவதியான பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

இத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு செய்கிறது. பேருந்து கட்டணம் விரைவில் உயரும்.

கடந்த 2019-ல் ‘ஃபேம் இந்தியா 2’ திட்டத்தின் கீழ் 525 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் நிலை என்னஎன்பது தெரியவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003-ல்கொண்டுவரப்பட்டது.

அதன் பிறகு2006-2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றி,கோடிக்கணக்கில் அபகரித்த அமைச்சரைதான் ஸ்டாலின்உடன் வைத்துள்ளார். அந்த அமைச்சர் மீதான வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

டி.ஜெயக்குமார்: எங்கள் ஆட்சியில் கோப்புகள் அனைத்தும் தயாராக இருந்த நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இல்லாவிட்டால் போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்கள் ஆக்கி இருப்போம்.

கோகுல இந்திரா: கட்டணமில்லா சேவை வழங்கியதால் அரசு பேருந்துகளில் அதிக பெண்கள் பயணிக்கின்றனர். இதை குறைக்க பிங்க் பெயின்ட் அடித்து ஏமாற்றுகின்றனர்.

ஆர்.பி.உதயகுமார்: சொத்து வரி, மின் கட்டண உயர்வு என அனைத்துக்கும் மத்திய அரசை கைகாட்டுகிறது திமுக அரசு.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, நா.பாலகங்கா, அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் தாடி.ம.ராசு, செயலாளர் ஆர்.கமலகண்ணன், பொருளாளர் அப்துல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் 2,000 பேர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.