தங்கவயல் : சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காஸ்மோபாலிடன் கிளப் சார்பில் நடந்த விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கம், நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதை காஸ்மோபாலிட்டன் கிளப் பராமரித்து வருகிறது.இதன் தலைவர் கோலார் மாவட்ட கலெக்டர்; துணைத் தலைவர் சுரேஷ் நாராயண் குட்டி, பொதுச் செயலர் நைனா ரவி, துணைச் செயலர் கமல்நாதன், பொருளாளர் பாண்டுரங்கன்.இவர்கள் ஏற்பாட்டில் நாட்டின் 75 வது சுதந்திர தின அமுத விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன
கிரிக்கெட் போட்டியில், வெற்றி பெற்ற துரை அணியினருக்கு ‘வின்னர்’ கோப்பையும்; சேகர் அணியினருக்கு ரன்னர் கோப்பையும் வழங்கப்பட்டது ஸ்னுாக்கர் ஒற்றையர் போட்டியில் முதல் பரிசு: வெங்கி, இரண்டாம் பரிசு: ராஜசேகர், மூன்றாம் பரிசு: சிவகுமார்; இரட்டையர் போட்டியில் முதல் பரிசு: ரஞ்சித், ஏவிகே; இரண்டாம் பரிசு: வெங்கி, அருண்; மூன்றாம் பரிசு: ராஜாச்சாரி, முகேஷ். கேரம் ஒற்றையர் போட்டியில் முதல் பரிசு: பிரதாப்; இரண்டாம் பரிசு: ஸ்ரீகாந்த்; மூன்றாம் பரிசு: பிரவீன். இரட்டையர் போட்டியில் முதல் பரிசு: சதீஷ், ஸ்ரீகாந்த்; இரண்டாம் பரிசு: பிரதாப், வினோத்;மூன்றாம் பரிசு: ராஜசேகர், பிரவீன்.
பேட்மின்டன் ஒற்றையர் போட்டியில் முதல் பரிசு பிரமோத்; இரண்டாம் பரிசு: விஜய்; மூன்றாம் பரிசு: ராஜசேகர். இரட்டையர் போட்டியில் முதல் பரிசு: ராஜாச்சாரி, -விஜய்; இரண்டாம் பரிசு: ராஜசேகர், அபி; மூன்றாம் பரிசு: செந்தில், பிரமோத்.சீட்டுக்கட்டு – கார்டுகள் போட்டியில், முதல் பரிசு: கருணாகரன், இரண்டாம் பரிசு: மோகன், மூன்றாம் பரிசு: சீனிவாசன்; ஆறுதல் பரிசு: வினோத், ரிச்சர்ட், அசோக், நிர்மல், மோகன், குமார் ஆகியோர் பெற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement