சரியான பாயிண்டை பிடித்த அண்ணாமலை.. திணறும் திமுக!

ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருள் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படும் நிலையில், அன்றைய தினம் சென்னையில் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் பிரசாரத்தை முதலமைச்சர்

தொடங்கி வைத்தார்.அதனை பின்பற்றி மாநிலம் முழுவதும், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

போதைப்பொருள் ஒழிப்பு பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் கல்வி கற்றும் காலங்களில் படிப்பில் கவனம் செலுத்தினால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றும் அறிவுரை கூறினார். மேலும் குடும்ப உறுப்பினரோ, நண்பர்களோ யாரும் போதைப்பொருள் பயன்படுத்தாதபடி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, 76-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், அதற்கு முந்தைய தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பிய வழிந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 14-ம் தேதி டாஸ்மாக் கடைகளின் விற்பனை விபரத்தை அரசு வெளியிட்டது.

அதன்படி, ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடி, சென்னையில் ரூ.55.77 கோடி, சேலத்தில் ரூ.54.12 கோடியும், திருச்சியில் ரூ.53.48 கோடி,கோவையில் ரூ.52.29 கோடி என மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டாஸ்மாக்(tasmac) விற்பனை விவகாரத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அவரது பதில் “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கப் போவதாக கடந்த ஆக.11-ஆம் தேதி உறுதிமொழி எடுத்தார். ஆனால், தமிழக அரசுக்கு சொந்தமான,’டாஸ்மாக்’ நிறுவனம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி, ஒரே நாளில், ரூ.273.92 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற கபட நாடகத்தால் திமுக அரசு எங்களை வியக்க வைக்க முடியாது” என்று கிண்டல் செய்துள்ளார். அண்ணாமலையின் இந்த கிண்டல் பேச்சு திமுக நிர்வாகிகளை கடுப்பாக்கியுள்ளது.

மது விற்பனை தொடர்பாக தமிழக அரசை கிண்டல் செய்துள்ள அண்ணாமலை கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற பாஜக விவசாயிகள் அணி மாநாட்டில் பேசியபோது டாஸ்மாக் மதுபான கடைகளை படிப்படியாக குறைத்துவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.