திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வேறு ஒரு நபருடன் இருந்த திருமணம் தாண்டிய உறவு காரணமாக தன்னுடன் வாழ மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி, ஜீவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் அருண்மொழி என்பவருக்கும் ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
திருமணம் ஆகி 9 ஆண்டுகள் கழித்தும் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. குழந்தை இல்லாத நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
முறையற்ற உறவு
இதனால் வேறு மனமுடைந்த அருண்மொழி குழந்தை பெற நினைத்து வேறு ஒரு ஆணுடன் நெருங்கி பழகி உள்ளார். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனால் அருண்மொழி 3 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் கணவன் வேல்முருகன் அறிந்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

மாயம்
இதனால் மனமுடைந்த அருண்மொழி வீட்டில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றுள்ளார். இதனால் மனைவி காணவில்லை என்று குப்பம் காவல்நிலையத்தில் கணவன் வேல்முருகன் புகார் அளித்து இருந்துள்ளார். மாயமான இருவரையும் கண்டு பிடித்த குப்பம் போலீசார் கள்ளகாதலனிடம் இருந்து பிரித்து அவரது தாயுடன் அனுப்பி வைத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாய் வீடு வந்த அருண்மொழியுடன் அவரது கணவர் வேல்முருகன் சமாதானம் செய்ய உடன் வந்து மாமியார் வீட்டிலேயே இரண்டு நாள் தங்கி உள்ளார்.

கொடூர கொலை
இனிமேலாவது எவ்வித பிரச்சினையும் செய்யாமல் வாழ்கிறேன் வா என்று அழைத்துள்ளார். எனக்கு யாரும் வேண்டாம் நான் தனிமையில் வசித்து கொள்கிறேன் என்று கூறி வீட்டில் இருந்து உள்ளார். இதனால் செய்வது அறியாமல் மனைவி மீது தீராத ஆத்திரத்தில் இருந்த வேல்முருகன் தான் மறைத்து வைத்து இருந்த பட்டன் கத்தியால் கழுத்து, வாய், கை போன்ற இடங்களில் கிழித்துவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதனை அறிந்த அருண்மொழியின் தயார் சின்னபாப்பா அலறி அடித்து கொண்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

விசாரணை
இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் தப்பி ஓடிய வேல்முருகனை குப்பம் போலீசார் உதவியுடன் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.