சென்னை : நடிகர் நாசர் சிறப்பான பல படங்களில் நடித்து வருபவர். தொடர்ந்து பல ஆண்டு காலங்களாக நடித்து வருகிறார்.
வில்லனாக தன்னுடைய கேரியரைத் துவங்கிய நாசர், ஹீரோ, கேரக்டர் ரோல்கள் என அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.
தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் நாசர். தற்போது தாத்தா கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் நாசர்
நடிகர் நாசர் தன்னுடைய இயல்பான நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிப்பு, இயக்கம், திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், டப்பிங் கலைஞர் மற்றும் பாடகராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சங்க நிர்வாகியாகவும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சிறப்பான நடிகர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல சீரியல்களிலும் இவரை காண முடிந்தது. கே பாலசந்திரனின் கல்யாண அகதிகள் மூலம் அறிமுகமான இவர், ஆரம்பத்தில் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்து வந்தார். ரஜினியின் வேலைக்காரன் படத்தில்தான் இவர் வில்லன் அவதாரம் எடுத்தார்.

வில்லனாக மிரட்டல்
தொடர்ந்து பல படங்களில் இவர் வில்லனாக மிரட்டியுள்ளார். யூகி சேதுவின் கவிதை பாட நேரமில்லை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நாசர், தொடர்ந்து அவதாரம் படத்தில் இயக்குநராகவும் மாறி, தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தினார். இந்தப் படம் மேக்கிங்கில் மிரட்டியது.

சிறப்பான டப்பிங்
மதராசப் பட்டினம், 96, விக்ரம் வேதா, தீரன் அதிகாரம் ஒன்று, ஆளவந்தான், குரு என பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும் இவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். பல ஆங்கில படங்களில் இவரது டப்பிங் சிறப்பான வரவேற்பை பெற்றது. அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நாசர்.

நாசருக்கு விபத்து
இதனிடையே தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் நாசருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நடிகை சுகாசினி, மெஹ்ரின், சாயாஜி ஷிண்டே ஆகியோருடன் இந்தப் படப்பிடிப்பில் நாசர் கலந்துக் கொண்டுள்ளார்.

நடிகர்கள் பிரார்த்தனை
இதனிடையே நாசருக்கு ஏற்பட்ட விபத்துக் குறித்தும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்தும் அறிந்த கோலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயல்பட்டுவரும் நாசர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.

நலமாக உள்ளதாக கமீலா நாசர் தகவல்
இதனிடையே நாசருக்கு சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் சிறிய காயம்தான் ஏற்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமாக உள்ளதாகவும் அவரது மனைவி கமீலா நாசர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.