ஜூலை 11 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை முன்னிட்டு ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற பன்னீர் செல்வம், தலை வைத்து வணங்கினார். அங்கு அவருக்கு ஆதராவாக அதிமுக தொண்டர்கள் திரண்டனர்.
அதிமுகவில் சென்ற மாதம் இரட்டை தலைமை பிரச்சனை உருவெடுத்தது. இந்நிலையில் முதல் பொதுக்குழு நடைபெற்றபோது, அதற்கு தடை விதிக்க நீதிமன்றம் சென்றார் பன்னீர் செல்வம். மேலும் இரண்டாவது பொதுக்குழு நடைபெற்று அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழசனிமி நியமிக்கப்படார். மேலும் பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது பொதுக்குழு. தன்னை நீக்கியவர்களை தானும் நீக்கியதாக பன்னீர் செல்வம் கூறினார். இந்நிலையில் இரண்டாவது நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகளே நீடிக்கும். இனி ஒரு வருடத்திற்கு பொதுக்குழு கூட்ட இயலாது . அப்படி பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றால் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் தீர்ப்புக்கு பின்பு, ஜெயலலிதாவின் சாமாதிக்கு சென்ற பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் தலை வைத்து வணங்கினார். அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் என்று அவர் தெரிவித்துள்ளார்.