Tamil Nadu News: தமிழகத்தில், மதுரையில் ரூபாய் 58.26 கோடிக்கும், சென்னையில் ரூபாய் 55.77 கோடிக்கும், சேலத்தில் ரூபாய் 54.12 கோடிக்கும், திருச்சியில் ரூபாய் 53.48 கோடிக்கும், கோயம்புத்தூரில் ரூபாய் 52.29 கோடிக்கும் டாஸ்மாகில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்களின் மூலம் ரூ.273.92 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள் மூடப்பட்டதால், ஆகஸ்ட் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதுபானம் வாங்கவும், சேமித்து வைக்கவும் மக்களின் கூட்டம் அலைமோதியது.
மதுக்கடைகள் விற்பனையை கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், திராவிட முன்னேற்றக் கழக அரசு இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“ஆகஸ்ட் 11: போதையில்லா தமிழகத்தை உருவாக்க தமிழக முதல்வர் உறுதிமொழி எடுத்தார்.
ஆகஸ்ட் 14: தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ஒரு நாள் சாதனை விற்பனையாக ரூ.273.92 கோடியை பதிவு செய்தது. @arivalayam கட்சி அவர்களின் பயங்கரமான பாசாங்குத்தனத்தால் நம்மை வியப்பில் ஆழ்த்துவதை நிறுத்தாது,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil