டெல்லி : பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக பிரதமருக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தார். முன்னதாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழஙினார். நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார். நிறைவேற்றப்படாத பல தமிழக கோரிக்கைகளையும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார்.