தபால் துறையில் 98,000+ காலியிடங்கள்; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

India post recruitment 2022 for 98000 vacancies: அரசு வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் மத்திய அரசு. ஆமாம், இந்திய தபால் துறையில் 98,083 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் போஸ்ட்மேன், மெயில் கார்டு மற்றும் பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 9,619 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்களின் விவரம்

போஸ்ட்மேன் (Post Man) – 59,099

மெயில் கார்டு (Mail Guard) – 1445

பன்முக உதவியாளர் (Multi-Tasking Staff) – 37,539

இதையும் படியுங்கள்: TNPSC Group 4 தேர்வு; கட் ஆஃப் குறையும்… காரணம் இதுதான்! ரிசல்ட் எப்போது?

தமிழக காலியிடங்களின் விவரம்

போஸ்ட்மேன் – 6,130

மெயில் கார்டு – 128

பன்முக உதவியாளர் – 3,361

கல்வித் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறை விரைவில் இணையதளத்தில் தொடங்கப்பட உள்ளது.  

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தேர்வர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.