தாய்லாந்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அதிர வைத்த தமிழ்நாட்டை சேர்ந்தவரின் அந்த அரசியல் கேள்வி!

பாங்காங்: தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் எழுப்பிய அரசியல் கேள்வி சர்ச்சையாகிவிட்டது. இந்தியாவுக்கு வந்து இது போன்ற கேள்விகளை கேட்கலாம் என அந்த நபருக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்திருக்கிறார்.

இந்தியா- தாய்லாந்து இடையேயான தூதரக உறவு 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சியிலும் இந்தியா- தாய்லாந்து கூட்டு ஆணையத்தின் 9-வது கூட்டத்தில் பங்கேற்கவும் தாய்லாந்து சென்றுள்ளார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.

தாய்லாந்தில் இந்திய சமூகத்தினருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலின் போது தாய்லாந்து வாழ் இந்தியர்கள், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். இந்தியா- தாய்லாந்து உறவு, இந்தியாவில் தொழில் தொடங்குவது, இந்திய பல்கலைக் கழகங்கள், ரஷ்யா- உக்ரைன் யுத்த காலத்தில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது என பல்வேறு கேள்விகள் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டன. இவை அனைத்துக்குமே மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார்.

அப்போது, தாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என அறிமுகம் செய்து கொண்ட ஒருவர் எழுந்து, தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில்: வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் போது இந்திய அரசியல் குறித்து பேசுவதில்லை. என்னிடம் நீங்கள் இந்த கேள்வியை கேட்க விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்.. மகிழ்ச்சியுடன் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார். இதனால் அந்த அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா- தாய்லாந்து கூட்டு ஆணையத்தின் 8-வது கூட்டம் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. அப்போது தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டோன் பிரமுத்வினை டெல்லி வருகை தந்திருந்தார். அப்போது இருதரப்பு தொழில் வர்த்தகம், அரசியல், ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டு ஆணையக் கூட்டத்துக்கு முன்னதாக இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவம் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.