ஹாவேரி : மருத்துவமனையில் கொடியேற்றும் போது குழந்தை பிறந்ததால் அதற்கு டாக்டர்கள், நர்ஸ்கள் மூவர்ண சால்வை போர்த்தி மரியாதை செய்தனர்.ஹாவேரி அருகே உள்ள குத்தலா கிராமத்தை சேர்ந்தவர் பர்ஜானா குதரி, 25. இவருக்கு, நேற்று முன்தினம் அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றனர்.
காலை 7:00 மணி அளவில், மருத்துவமனை முன், தேசியக் கொடி ஏற்றி, சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.இதையடுத்து நர்ஸ்கள், அந்த குழந்தையை கொடிக்கம்பத்தின் முன் கொண்டு வந்து, அனைவருக்கும் காண்பித்தனர். மேலும் மூவர்ண சால்வையை போர்த்தி மரியாதை செய்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. குழந்தையுடன் ஊழியர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.’சுதந்திர தினத்தில், கொடியேற்றும் போது பிறந்த குழந்தை என்பதால் அதற்கு தனிச்சிறப்பு வாய்ந்த பெயர் வைக்க வேண்டும்’ என பெற்றோருக்கு டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement