அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் பயணத்தைத் தொடர்ந்து சீனா மற்றும் தைவான் மத்தியிலான பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது மட்டும் அல்லாமல் சீனா பல நாட்களாகத் தைவான் எல்லை பகுதிக்கு அருகில் ராணுவ ஒத்திகை நடத்தி வருகிறது. சீனா-வை ஒப்பிடுகையில் பணப் பலம், ஆயுத பலம், ராணுவ பலம் என அனைத்திலும் தைவான் மிகவும் சிறியதே, ஆனாலும் தைவான் மீது சீனா கைவைக்காமல் இருக்க முக்கியக் காரணம் என்ன தெரியுமா..?
இந்தியா – ரஷ்யாவுக்கு கைகொடுக்கும் ஈரான்.. 3 மாதத்தில் 114 கண்டெய்னர்..!
சீனா தைவான்
சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தினால், சொந்த காசில் சூனியம் வைத்து போல் சீனாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியும், பொருளாதார வீழ்ச்சியும், ஏற்றுமதி சரிவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனாலேயே சீனா தைவான் நாட்டின் மீது தாக்குதல் நடத்த யோசித்து வருகிறது எனக் கருத்து நிலவுகிறது.
1 சதவீத ஜிடிபி
அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்கள் தைவானுக்கு வந்த பின்பு சீனா அந்நாட்டின் மீது விதித்த பொருளாதார, வர்த்தகத் தடைகள் அனைத்தும் வெறும் 1 சதவீத ஜிடிபி-யை மட்டுமே பாதிக்க உள்ளது எனப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவுக்கே பாதிப்பு
சீனா இனி வரும் நாட்களில் உணவுப் பொருட்கள், மரம், கனிம வளங்கள் மீதான தடையை அதிகரிக்க முடியும், ஆனால் தைவான் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க வேண்டும் நோக்கில் அந்நாட்டின் முக்கியமான துறையாக விளங்கும் செமிகண்டக்டர் மீது தடை விதித்தால், அது கட்டாயம் சீனாவுக்கே பெரும் பாதிப்பாக முடியும்.
செமிகண்டக்டர்
செமிகண்டக்டர் சிப் மற்றும் செமிகண்டக்டர் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்திற்காகச் சீனா அதிகளவில் தைவான் நாட்டை நம்பி தான் இயங்கி வருகிறது. இதேவேளையில் சீனாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மற்றும் தயாரிப்பில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாக உள்ளது. இதனால் சீனா கட்டாயம் தைவான் நாட்டின் தொழில்நுட்ப துறை மீது எவ்விதமான தடையும் விதிக்க வாய்ப்பு இல்லை.
தைவான் ஆதிக்கம்
உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகத்தில் தைவானின் பங்கைப் பார்த்தால் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. தைவானில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்களைத் தடை செய்தால், மாற்று விநியோகத்தைக் கண்டுபிடிப்பது சீனாவுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் மா டையிங் கூறியுள்ளார்.
சீனா மற்றும் ஹாங்காங்
தைவானின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 40% சீனா மற்றும் ஹாங்காங் பங்கு வகிக்கிறது, இருப்பினும் தைவான் கடந்த ஆண்டுகளில் சீனாவை பொருளாதார ரீதியாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் குறைந்த காலகட்டத்தில் அதிகக் கட்டுப்பாடுகள் தைவானுக்குப் பொருளாதாரத் தலைவலியாக இருக்கும்.
China more dependent on Taiwan; big sanctions will affect china economy more than taiwan
China more dependent on Taiwan; big sanctions will affect china economy more than taiwan தைவான் மீது கைவைக்கத் தயங்கும் சீனா.. இதுதான் காரணமா..?