
நண்பர்களுடன் பார்ட்டி : வனிதா கொண்டாட்டம்
அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்த நடிகை வனிதா விஜயகுமார் தற்போது அந்தகன், அனல்காற்று, பிக்கப் டிராப், கொடூரன், காத்து உள்பட பல படங்களில் முக்கிய வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சின்னத்திரையிலும் பிஸியாக வலம் வரும் இவர் ஜவுளிக்கடை மற்றும் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர்கள் உடன் இணைந்து ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் வனிதா விஜயகுமார். அந்த பார்ட்டியில் காமெடி நடிகர் ரோபோ சங்கருடன் இணைந்து அவர் அதிரடி ஆட்டம் ஆடி இருக்கிறார். இவர்கள் தவிர பிரஜன் உள்ளிட்டவர்களுடன் இந்த பார்ட்டியில் பங்கேற்றனர். அதுதொடர்பான போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர்.