நான் அடிமை இல்லை ஸ்ரீராமுலு ஆவேசம்| Dinamalar

பல்லாரி : ”நான் யாருக்கும் அடிமை அல்ல. யாருக்கும் பயப்பட மாட்டேன்,” என போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.பல்லாரியில் நேற்று குருபா சங்கத்தினர் வர்த்தக கட்டடம், மாணவர் விடுதியை போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு திறந்து வைத்து பேசியதாவது:அரசியலுக்காக நானும், சித்தராமையாவும் மாறி மாறி பேசிக்கொள்வோம்.

ஆனால் தனிப்பட்ட முறையில் அவருடன் எந்த சச்சரவும் இல்லை. பா.ஜ.,வில் நான் முதல்வராகலாமா என அவரிடம் கேட்டால், அவரும் ஒப்புக்கொள்வார். இது அரசியல் தந்திரம். இப்படி செய்தால் தான் அரசியலுக்கு அர்த்தம் இருக்கும்.பிற்படுத்தப்பட்டோரை ஒன்றிணைக்கும் பணியை சித்தராமையாவும், நாங்களும் செய்து வருகிறோம். அவர்கள் ஒன்றிணைந்தால் மாநிலமும், நாடும் வளர்ச்சி அடையும். பிற்பட்டோருக்கான பிரச்னை என்றாலும், நானும், அவரும் குரல் கொடுப்போம்.கடந்த தேர்தலில் நானும், அவரும் தலா இரு தொகுதியில் போட்டியிட்டோம். ஒன்றில் வெற்றியும்; ஒன்றில் தோல்வியும் அடைந்தோம். என் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன். யாருக்கும் நான் அடிமையும் அல்ல.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.