ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவராக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அப்பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
சுகாதார காரணங்களை சுட்டிக்காட்டி, குலாம் நபி ஆசாத் புதிய பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள ஜி-23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர்.