புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ V25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதன் பின்புறத்தில் உள்ள பேனல் நிறம் மாறும் தன்மையை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது V25 புரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ.
V23 புரோ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து V25 புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 5ஜி இணைப்பில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- வளைந்த (Curved) வடிவிலான டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் உள்ள பேனல் நிறம் மாறும் தன்மையை கொண்டுள்ளது இந்த போன்.
- இந்த போனின் திரை அளவு 6.56 இன்ச். ஃபுள் ஹெச்.டி+ ரெஸலுஷனில் இந்த போன் வெளிவந்துள்ளது.
- பன்ச் ஹோல் டிஸ்பிளே டிசைன் வடிவை இந்த போன் பெற்றுள்ளது.
- மீடியாடெக் டைமன்சிட்டி 1300 Soc சிப்செட்.
- 4,830mAh திறன் கொண்ட பேட்டரி.
- 66 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் பிரதான கேமரா 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது.
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா.
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது.
- இதன் விலை ரூ.35,999 மற்றும் ரூ.39,999 என உள்ளது.
- வரும் 25-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join us as we take you through a journey of a few friends reuniting to reminisce and create magical new memories with the all-new vivo V25 Pro.
Pre-book Now: https://t.co/GfemC1lJJs#MagicalPhone #DelightEveryMoment #vivoV25Pro #V25Series #MagicalNights pic.twitter.com/6ENOyFawh2
— Vivo India (@Vivo_India) August 17, 2022