அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் பல்கலை துணைவேந்தர்கள் நியமனம்:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்குப் புதிய துணை வேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ஜி.ரவி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு டி.ஆறுமுகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு என்.சந்திரசேகர் ஆகியோர் புதிய துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஆளுநர்களின் அதிகாரங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் ஆளுநரின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் ஆளுநரின் அதிகாரம் தொடர்பான சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் ஆளுநர் தற்போது துணை வேந்தர்களை நியமித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதே போல் கேரளாவிலும் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் அதிகார மோதல் நிலவி வருகிறது .
இதனாலேயே ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வண்ணமாக சில மாநில கட்சிகள் செயல் படுகின்றன. திமுக ஏற்க்கனவே இது குறித்து பேசிய பொழுது பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில அரசு தான் துணை வேந்தர்களை நியமிகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஆளுநரின் அதிகாரம் ஓங்கி இருக்கிறது என குற்றம் சுமத்தியிருக்கிறது.
தமிழக ஆளுநரின் இந்த துணை வேந்தர்கள் நியமனம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.