பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று தமிழக முதல்வர்
நேற்று டெல்லி சென்றுள்ளார். அரசு சார்ந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக இந்த டெல்லி பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின்சந்தித்து பேசியுள்ளார். டெல்லிக்கு பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரையும் ஸ்டாலின் சந்தித்து பேசி உள்ளார். பிறகு பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த முக்கிய பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளார்.
அதற்கு முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் இது போன்ற போட்டிகளை தொடர்ந்து தமிழகத்தில் நடத்திடவும் வாய்ப்பு கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளான நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை, காவேரி விவகாரம், மேகதாட்டு அணை விவகாரம், முல்லைப் பெரியாறு , நதிநீர் இணைப்பு, கச்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், மின்சார திருத்தச் சட்டம், ஜிஎஸ்டி நிலுவை தொகை விடுவிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து மோடியுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
மழைக்காலம் வர உள்ளதால் பேரிடர் நிவாரண நிதி விவகாரம், ஏய்ம்ஸ் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று தகவல் வெளிவந்துள்ளது. குடியரசு தலைவர், துணை தலைவர் மற்றும் பிரதமர் உடனான இந்த சந்திப்பில் ஸ்டாலின் அனைவருக்கும் பாரம்பரிய அரிசி வகைகளை பரிசாக அளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த டெல்லி அரசியல் பயணம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.