பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, காட்டுத்தீயை கையாள்வதில் அந்நாட்டிற்கு இந்தியா துணை நிற்கும் என உறுதியளித்தார்.
இது குறித்து சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ள பிரதமர், இந்தியா – பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாகவும், உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்தும் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பில் உலகளவில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள இணைந்து பணியாற்ற இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.