மும்பை: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் விலாஸ்பூரில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பயணிகள் ரயில் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. மராட்டிய மாநிலம் கோண்டியா அருகே நள்ளிரவில் ரயில் வந்த போது சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.இதில் பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகளும், உள்ளூர் காவல் துறையினரும் படுகாயம் அடைந்த 50 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. சிக்கனலில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தால் சேதமடைந்த தண்டவாளத்தை புனரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.