பெங்களூரு மதிய உணவு ஊழியர் சங்கத்தினர், நேற்று முதல் பெங்களூரில் காலவரையற்ற போராட்டம் துவக்கினர்.பாகல்கோட்டை சேர்ந்தவர் சாரதவ்வா, 60. அரசு பள்ளியில் மதிய உணவு ஊழியராக, 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 2022 மார்ச் 31ம் தேதியுடன், இவருக்கு 60 வயது முடிந்தது. இதனால், இவர் ஓய்வு பெற்றார். இதுபோன்று, மாநிலத்தில் பலர் ஓய்வு பெற்றனர்.திடீரென தங்களை வீட்டுக்கு அனுப்புதை கண்டித்து, கர்நாடகா மாநில மதிய உணவு ஊழியர் சங்கத்தினர்,
பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர்.அப்போது சாரதவ்வா கூறியதாவது:பாகல்கோட் அரசு பள்ளியில் 2002ம் ஆண்டு முதல் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தேன். கவுரவ நிதியாக 300 ரூபாய் வழங்கினர். 2022ம் ஆண்டு பணியிலிருந்து ராஜினாமா செய்வதாக கூறியவுடன், எனது சம்பளத்தை 2,600 ரூபாயாக அதிகரித்தனர்.அப்போது, 400 மாணவர்கள் இருந்தனர். இப்போது 800 – 900 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நான் உட்பட ஆறு பேர் சமையல் செய்து, அவர்களுக்கு பரிமாறி, பாத்திரங்களை சுத்தம் செய்து வருகிறோம். தற்போது, வேலையை விட்டு அனுப்புவதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement