மதுரை பாண்டியன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட காடை வறுவலில் புழு

ஆரணியில் உள்ள மதுரை பாண்டியன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட காடை வறுவலில் புழு இருந்ததாக எழுந்த புகார் குறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இந்த உணவகத்துக்கு சென்ற ஒருவர், காடை வறுவல் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட காடை கறியில் புழு இருந்ததாக கூறப்படும் நிலையில், அந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் உணவகத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறையினர், புழு இருந்ததாக கூறப்படும் உணவை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.