சியோல்: வட கொரியா புதன்கிழமை இரண்டு க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த ஆண்டு ஆயுத சோதனைகளில் பியோங்யாங் சாதனை படைத்திருந்த நிலையில், சுமார் ஒரு மாத காலம் எந்த சோதனையும் செய்யப்படாமல் இருந்தது. எனினும், அந்த மந்தநிலையை தற்போதைய ஆயுத சோதனை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று தென் கொரியா குறிப்பிட்டுள்ளது. “இன்று அதிகாலையில், தென் பியோங்கன் மாகாணத்தின் ஓஞ்சோனில் இருந்து வட கொரியா இரண்டு கிரூஸ் ஏவுகணைகளை மேற்குக் கடலில் செலுத்தியதை நாங்கள் கண்டறிந்தோம்” என்று அமைச்சக அதிகாரி ஒருவர் எஃப்பி இடம் கூறினார்.
“அமெரிக்கா மற்றும் தென் கொரிய இராணுவ அதிகாரிகள் விமான தூரம் போன்ற விரிவான விவரக்குறிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.” என்று தெரிவிகப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் வட கொரியா, ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளின் கீழ் தடை செய்யப்படாத கிரூஸ் ஏவுகணையை சோதிக்கவில்லை என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலல்லாமல், க்ரூஸ் ஏவுகணைகள் ஜெட் என்ஜின்களால் உந்தப்பட்டு தரைக்கு நெருக்கமாக இருக்கும். இதனால் அவற்றைக் கண்டறிவது கடினமாகிறது. பெரும்பாலான க்ரூஸ் ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
மேலும் படிக்க | பெலோசியின் தைவான் பயணம் போரை தூண்டுவதற்கு தான்: அமெரிக்காவை சாடும் புடின்
பியாங்யாங் கடைசியாக ஜூலை 10 அன்று ஆயுத சோதனையை நடத்தியது. அப்போது மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்கள் என நம்பப்பட்ட ஆயுதங்கள் சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை முழு வீச்சில் ஏவுவது உட்பட, தடைகளை முறியடிக்கும் பல சோதனைகளை வட கொரியா ஜனவரி முதல் நடத்தியுள்ளது.
வாஷிங்டன் மற்றும் சியோலில் உள்ள அதிகாரிகள் வட கொரியா, அதன் ஏழாவது அணுசக்தி சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் எச்சரித்துள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில், தென் கொரிய மற்றும் அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் தங்கள் வருடாந்திர ஒருங்கிணைந்த Ulchi Freedom Shield (UFS) பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னதாக பூர்வாங்க பயிற்சிகளைத் தொடங்கினர்.
இந்த பயிற்சிகள் பியாங்யாங்கை ஆத்திரமூட்டும் வகையில் உள்ளன. இவற்றால் வட கொரியாவின் பொறுமை சோதிக்கப்படுகின்றது என உலக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த பயிற்சிகளை படையெடுப்புக்கான ஒத்திகையாக வட கொரியா கருதுகிறது.
மேலும் படிக்க | Yuan Wang 5: சர்ச்சைக்குரிய சீனாவின் ‘யுவான் வாங்’ கப்பல் இலங்கை வந்தடைந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ